இலங்கையில் படிப்படியாக வணிகம் செய்வதற்கு வழி காட்டும் நூல் ஒன்றினை இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ளது. (A Step by Step Guide to Doing Business in Sri Lanka)
 
இலங்கையில் வணிக முயற்சி ஒன்றினை தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள வணிக முயற்சியினை விரிவுபடுத்த எத்தனிப்பவர்களிற்கு இலங்கையில் காணப்படும் வணிகம் சார்ந்த சட்ட திட்டங்கள் மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பாக இந்து நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் 28 தலைப்புக்களின் கீழ் விரிவாக விளக்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு வணிக முயற்சியை எவ்வாறு பதிவு செய்வது?, முதலீட்டுச் சபையின் அனுமதியை எவ்வாறு பெறுவது?, ஒரு சொத்தினை எவ்வாறு பதிவளிப்பது?, வணிகம் சார்ந்த சட்டதிட்டங்களை எவ்வாறு அனுசரிப்பது?, ஊழியர் நம்பிக்கை மற்றும் சேமலாப நிதியங்களிற்கான கொடுப்பனவுகள், பங்குகளை வெளியீடு செய்யும் போதுள்ள நடைமுறைகள், ஏற்றுமதி -  இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தின் போதான நடைமுறைகள், .... என பல விடயங்கள் தொடர்பான விளக்கத்தினை இந்த நூல் வழங்கும்.
 
தவிரவும் வணிக முயற்சிக்கான வங்கிக் கணக்கினை எவ்வாறு ஆரம்பிக்கலாம்?, வரிகளை எவ்வாறு செலுத்த வேண்டும்?, கடவுச் சீட்டு மற்றும் அனுமதி பத்திர நடைமுறைகள் தொடர்பாகவும் இவற்றுக்கும் மேலதிகமாக யார்யாரை எல்லாம் தொடர்பு கொண்டு அறிய முடியும்? என்பன தொடர்பாகவும் தரப்பட்டுள்ளன.
 
இதனை இலங்கை மத்திய வங்கியிடமும் புத்தக சாலைகளிலும் 500 ரூபா செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.


                                       2011 ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை,

2011 ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை, கடந்த திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கியினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கையின் பொருளாதாரம் சென்ற ஆண்டு எட்டு புள்ளி மூன்று சதவீதத்தினால் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளிற்கு எட்டு சதவீதத்திற்கும் மேலான உயர் பொருளாதார வளர்ச்சி வீதமானது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவாகி உள்ளது. இதே போல, இலங்கையின் பணவீக்கத்தினை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒற்றை இலக்கத்தில் பேண முடிந்துள்ளது. அத்துடன் அரச வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையும் குறிப்பிடத்தக்க அளவினால் குறைவடைந்துள்ளது. 
 
மேலும் முன்னைய ஆண்டுடன் (2010) ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகள், வேலை வாய்ப்பு, உள்நாட்டு முதலீடு மற்றும் இதில் தனியார் துறையின் பங்களிப்பு போன்றவற்றில் சாதகமான பல முன்னேற்றங்களை கண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. 
 
எனினும், விவசாயத் துறையின் வளர்ச்சி (-5.5%), தேறிய ஏற்றுமதி (-6.3%), உள் நாட்டு (-3.9%) மற்றும் தேசிய சேமிப்பு (-3.3%), ஆண்டுச் சராசரி பணவீக்கம் (0.5%) ஆகியன எதிர் கணிய நிலையில் வளர்ச்சி கண்டுள்ளன. 
 
குறிப்பாக, அடையப்பட்ட உயர் பொருளாதார வளர்ச்சியினை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான குறிகாட்டிகளில் இலங்கை இன்னும் முன்னேறவில்லை. விசேடமாக, விலை மட்டம், ரூபாவின் பெறுமதி, தேறிய ஏற்றுமதி, சேமிப்பு மற்றும் முதலீடுகள், வேளான் துறையின் வளர்ச்சி, வருமான ஏற்றத் தாழ்வு போன்ற குறிகாட்டிகள் தொடர்பாக அரசு இன்னும் அதிக அக்கறை எடுத்தாக வேண்டியுள்ளது.
 
(என்.சிவரூபன்)
 

பொருளியல் குறிகாட்டிகள் (% இல்) 2010 2011   மாற்றம்
1  .மொ.உ.உ.வளர்ச்சி வீதம்              8          8.3 0.3
2 .விவசாயத் துறையின்  வளர்ச்சி வீதம்                 7          1.5 -5.5
3 .கைத்தொழில் துறையின்  வளர்ச்சி வீதம்              8.4        10.3 1.9
4 .சேவைத் துறையின்  வளர்ச்சி வீதம்                 8         8.6 0.6
5 .வேலையின்மை வீதம்            4.9         4.2 -0.7
6 .தனியார் முதலீடுகள் (% in GDP)          21.4       23.7 2.3
7 .அரச முதலீடுகள்            6.2         6.3 0.1
8 .தேறிய ஏற்றுமதி           -8.3      -14.6 -6.3
9 .உள் நாட்டுச் சேமிப்பு வீதம்    (% in GDP)            19.3       15.4 -3.9
10 .தேசிய சேமிப்பு வீதம்    (% in GDP)            25.4       22.1 -3.3
11 .ஆண்டுச் சராசரி பணவீக்க வீதம்             6.2         6.7 0.5
12 .சனத்தொகை வளர்ச்சி வீதம்                1            1 0


                                                        வேளான் துறையில் ஓர் வீழ்ச்சி

 சென்ற ஆண்டு (2011), இலங்கையின் வேளான் துறையில் ஓர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எட்டு புள்ளி மூன்று சதவீதத்தினால் உயர்வடைந்துள்ள போதும், விவசாயத் துறையின் வளர்ச்சியானது ஒன்று புள்ளி ஐந்து சதவீதம் என மிகக் குறைந்த அளவினாலேயே அதிகரித்துள்ளது. இதுவே முன்னைய ஆண்டில் (2010), ஏழு சதவீதம் என உயர்வாக வளர்ச்சி கண்டிருந்தது. 
 
குறிப்பாக, நெல் (-19%), கால்நடை (-8.4%), இறப்பர் (-0.9%), தேயிலை (-0.1%) போன்ற விவசாய உற்பத்திகள் எதிர் கணிய நிலையில் வளர்ச்சி கண்டிருந்தன. இதற்கு, கால நிலையில் காணப்பட்ட பாதகமான நிலமைகளே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 
 
இது இவ்வாறு இருக்க, உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு தொடர்ந்தும் குறைவடைந்தே வருகின்றது. 2010 ல் 11.9 சதவீதமாக இருந்த விவசாயத் துறையின் பங்களிப்பு, 2011 ல் 11.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
 

                                        2016ஆம் ஆண்டில் தலா வருமானம் 4000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்

2016ஆம் ஆண்டில் இலங்கையரின் தலா வருமானம் நான்காயிரம் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் 61ஆவது ஆண்டறிக்கை வெளியீட்டு வைபவத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2009ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 53 டொலர்களாக இருந்த தனிநபர் வருமானம் 2010 ஆம் ஆண்டில் 2ஆயிரத்து 400 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ளன. 2009ஆம் ஆண்டில் முழு உலகிலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதும் நாம் 3.05 சதவீத பொருளதார வளர்ச்சியை அடைந்தோம் என்றார்.

                                                 இலங்கையின் பொருளாதாரம் 8 சதவீதமாக உயர்வு… மத்திய வங்கி 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2010ஆம் ஆண்டில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

34 வருடங்களின் பின்னர் இவ்வாறான பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்திருப்பதாகவும் இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் இரண்டாவது தடவையாக உயர் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 61ஆவது ஆண்டறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் அவர்கள் தலைமையில் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்ட இந்நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2010 ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி அறிக்கைக்கமைய விவசாயத் துறை 7 சதவீதமாகவும் கைத்தொழில் துறை 8.4 சதவீதமாகவும் சேவைகள் துறை 8 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்

பொருளாதார கொள்கையின் பலன்கள் பொது மக்களுக்கு கிடைக்கும் நிலையை ஏற்படுத்து தமது பொறுப்பாகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


உலக பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகததை 8.3 வீதம் வரை உயர்த்த முடிந்தமை தொடர்பாக மகிழ்ச்சியடைவதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.2011 ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கையான இலங்கை மத்திய வங்கியின் 62 ஆவது வருடாந்த அறிக்கையாகும்.

1980 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிவேகம் 4.5 என்ற மட்டத்தில் இருந்ததுடன் வேலையின்மை ஏழு வீதத்திற்கும் எட்டு வீதத்திற்கும் இடைப்பட்டதாக அமைந்திருந்தது, வறுமை நிலை 15 வீதத்திற்கும் மேற்பட்டதாக அமைந்திருந்ததென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

2005ஆம் ஆண்டு ஆயிரத்து 225 அமெரிக்க டொலர்களாக இருந்த தனிநபர் வருமானம் தற்போது இரண்டாயிரத்து 835 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டங்களே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ள ஜனாதிபதி நாட்டில் வேலையின்மை 4.2 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுளார்

பல்வேறு அர்ப்பணிப்புடன் பெற்றுக்கொண்ட சமாதானத்தை நிலையாக பேணும் வகையில் அரசாங்கம் வலுவாகவும் ஸ்திரமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஒரேநாளில் ஏற்படுத்த முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதற்காக வழங்கப்படும்.

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola