2013 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
பாராளுமன்றில் சமர்ப்பித்து உரைநிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அவரது உரையின் பிரகாரம் வரவு -செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை சுருக்கமாகத் தருகிறோம்.

2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல்.

பாதுகாப்பு பிரிவினருக்காக 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதி. அதற்கென 2013 வரவு – செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வறிய பிரதேச மாணவர்களுக்காக சத்துணவும் சப்பாத்தும் வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு தடவை சீருடை.

சுற்றுலாத்துறை வருமானமாக 2.5 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது.

வறட்சியினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்போகம் வரை நீக்கம். வட்டி முற்றாக நீக்கம்.

நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 102 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

லக் சத்தொச விற்பனை நிலையங்களை ஆயிரமாக அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.


மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா.

சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ஹெக்ரெயர் ஒன்றுக்கான உதவித் தொகை 3 இலட்சத்திலிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரிப்பு

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய, உற்பத்திகளின் தரத்தை முறையாகப் பேணிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உதவி
ஆடைத் துறையிலிருந்து 5000 மில்லியன் டொலர் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டில் பொலனறுவை, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடத்தத்திட்டமிட்டுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கத் தடை.

சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

கல்வித் துறைக்கு 306 பில்லியன் ரூபா (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 வீதம்) ஒதுக்கீடு.

ஊடகவியலாளர், கலைஞர்களுக்கு வட்டியில்லா கடனைப் பெற்றுக்கொடுப்பதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 25 வீத வரி
அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு

நிரந்தர வருமானமில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5000 ரூபா



மக நெகும’ கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்

இலங்கையின் முழு வீதிகள் வலையமைப்பிலிருந்து வருகின்ற 72% வீதமான வீதிகள் கிராமிய வீதிகளாகும். அரசியலமைப்புக்கான 13-வது திருத்தம்1987 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், 2004 ஆம் ஆண்டு வரை மத்திய அரசாங்கத்தினால் நிதியிடப்பட்ட தனியான ஒரு கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் இருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டில், 213 மில்லியன் ரூபாய் நிதி ஒரு முன்னோடிக் கருத் திட்டத்தின் கீழ் முதலிடப் பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டில் கிராமிய வீதிகளின் அபிவிருத்தியின் நிமித்தம் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் பொது வரவு செலவு திட்டத்தின் மூலம் நிதிகளை ஒதுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.



மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் அன்று கௌரவப் பிரதம மந்திரியாகவும் கௌரவ நெடுஞ்சாலைகள் விடய அமைச்சராகவும் தொழிற்பட்ட நேரத்தில் இந்த ‘மக நெகும நிகழ்ச்சி திட்டம்’ 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையினது (வீ.அ.அ.ச) நேரடித் தொழிலாளர் படையினூடாக அல்லது கிராம மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்தும் சமுதாய மைய அமைப்புகளின் பங்களிப்பைக் கொண்டு அநேகமான கிராமிய வீதிகள் வாகனங்கள் செல்லக் கூடிய அளவுக்கு சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.



கம நெகும அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாட்டு முன்னேற்ற

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கமநெகும அபிவிருத்தித்திட்டமானது வளமான கிராமங்களை உருவாக்குவதன் மூலமாக பேண்தகு தேசிய அபிவிருத்தியை அடைவதற்கான நோக்கோடு அமுல்படுத்தப்படுகிறது.

மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டுள்ளவாறு ஒரு புதிய இலங்கையை கட்டியெழுப்புகின்ற இலக்கோடு இத்திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றது.

வடமாகாண சபையின் ஆளுனர் கெளரவ ஜீ.எ. சந்திரசிறி தலைமையில் பிரதேச சபைகளின் அங்கத்தவர்கள், வடமாகாண உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வடமாகாண சபை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் 24 பங்குனி 2011 அன்று யாழ் நகரிலுள்ள வடமாகாண சபையின் மாநாட்டு மண்டபத்தில் திட்டத்தின் செயற்பாட்டு முன்னேற்றம் பற்றிய மீளாய்வு கூட்டம் இடம்பெற்றது.

இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 320 மில்லியன் ரூபாவை வடமாகாணத்தில் திட்ட அமுலாக்கம் செயற்படுவதற்காக வழங்க ஏற்கனவே  அங்கீகாரம் வழங்கியிருந்தது. 

கமநெகும திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களுக்கான திட்டங்கள் தற்போது முன்னெடுத்து செல்லப்படுகின்றன. உள்ளூராட்சி சபைகள் முகம் கொடுக்கும் இடர்பாடுகளை கருத்தில்கொண்டு பார்த்தால் 17 உள்ளூராட்சி அமைப்புக்கள் மட்டுமே திட்டங்களை பயன்படுத்தும் நிலையிலுள்ளன.  இவ் வகையான விடயங்களை அணுகி ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக கெளரவ ஆளுனர் அவர்கள் அதிகாரம் கொண்ட செயற்குழு ஒன்றை நியமித்துள்ளார். கமநெகும திட்டத்தின் மூலமாக கிடைக்கும் பயனை ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் அடுத்த இருமாதங்களுக்குள் அடையத்தக்க சூழலை உருவாக்குவதே இக் குழுவின் நோக்கமாகும். 

மேலும் கமநெகும திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான வேறு விடயங்களும் இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முன்னேற்றங்களையிட்டு கெளரவ ஆளுனர் திருப்தி தெரிவித்தார். 

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் திரு ஏ.சிவசாமி, ஆளுனரின் செயலாளர் திரு எஸ்.ரங்கராஜா, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர். விஜயலட்சுமி, உட்கட்டுமான அமைச்சின் செயலாளர் திரு ஏ.ஈ.எஸ். இராஜேந்திரா ஆகியோருடன் கமநெகும திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களும் இந்த மீளாய்வுக் கூட்டத்திற்கு சமுகமளித்திருந்தனர்.


பத்து வருட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சியை 8 வீதமாக உயர்த்தி, 2016 ஆண்டளவில் இலங்கையின் தனிநபர் வருமானத்தை.....

 

பத்து வருட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சியை 8 வீதமாக உயர்த்தி, 2016 ஆண்டளவில் இலங்கையின் தனிநபர் வருமானத்தை 4 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையை உயர் வருவாய் கொண்ட நாடாக உயர்த்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். முதலீடுகளை அதிகரித்தல், வருமானத்தை அதிகரித்தல் ஆகிய இரண்டு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய உற்பத்திகள் மூலம் பெறப்பட்டு வரும் 30 வீத பலாபலனை 50 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அதாவுத செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். 

                                               கப்றுக புறவர” அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

“கப்றுக புறவர” என்பது இலங்கையில் உள்ள தெங்கு கைத்தொழில் துறையினை உயர்த்துவதற்கும் அதன் இலக்குகளை எய்துவதற்கும் அமுல்படுத்த வேண்டிய பிரதான நிகழ்ச்சித்திட்டங்களிலொன்றாகும். 2011 ஆம் ஆண்டில் 22 பிரதேச செயலாளர் பிரிவூகளில் ஆரம்பிக்கப்பட்டு ஆகக்குறைந்ததது 180 பிரதேச செயலாளர் பிரிவூகள் வரை விரிவூப்படுத்தப்பட்டுள்ளது.

அறிமுகம்
கப்றுக புறவர நிகழ்ச்சித்திட்டமானது

  • மஹிந்த சிந்தனை மற்றும் மஹிந்த சிந்தனை எதிh;கால தொலைநோக்கில் குறித்துரைக்கப்பட்ட குறிக்கோள்களை இலக்காகக் கொள்கின்ற ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றாகும்
  • மாவட்டங்களில் தெரிவூ செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவூகளில் அமுல்படுத்தப்படும்.
  • இலங்கையில் உள்ள தெங்கு கைத்தொழிலில் இலக்குகளை அடைவதற்கான உபாய நிகழ்ச்சித்திட்டமாக அமுல்படுத்தப்படும்.
  • தெங்கு கைத்தொழிலில் அபிவிருத்திக்கான ஒருங்கிணைக்கப்பட்டதொரு அடைவழியாக இருக்கும்.
  • இத் தெரிவூ செய்யப்பட்ட பிரிவூகளில் தெங்கு கைத்தொழில் அபிவிருத்தி மீது விளைவூ ஒன்றினை கொண்டுள்ள ஒவ்வொரு தனித்துறையின் மேம்படுத்தல் பற்றி கவனம் செலுத்துகின்ற நிகழ்ச்சித்திட்டம் ஒன்றாக இருக்கும்.

குறிக்கோள்கள்:

  1. தெரிவூ செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவூகளில் தெங்கு பயிர் செய்கைக் காணி உற்பத்தி திறனை மேம்படுத்தல்.
  2. பிரதேச செயலாளர் பிரிவூகளில் உள்ள தெங்கு பயிர் செய்கைக்கான சாத்தியப்பாடுடைய காணிகளில் பயிர் செய்கையினை விரிவாக்கல்.
  3. தெரிவூ செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவூகளில் மரம் ஒன்றிற்கான வருடாந்த தேங்காய் அறுவடையினை 100 காய்களாக அதிகரித்தல்.
  4. தெரிவூ செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவூகளில் தெங்கு அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை அடையாளப்பத்தலும் ஊக்குவித்தலும்.
  5. தெங்கு அடிப்படையாகக் கொண்ட புதிய வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல்.
  6. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவூசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவை மேம்படுத்தல்.
  7. பிரதேச செயலாளர் பிரிவூகளில் உள்ள சமூகத்திற்கு தெங்கு மற்றும் அதன் பயிர் செய்கைக்கு எவ்வாறு தொடர்புபட்டது என்ற ஆராய்ச்சிஇ தெரிந்து கொள்ளலை இடம்மாற்றல்.
  8. தேங்காய் மற்றும் தெங்கு அடிப்படையாகக் கொண்ட சந்தைபடுத்தல் வாய்ப்புக்களை விரிவாக்கல்.
  9. தெங்கு பயிர் செய்கை மற்றும் தொடர்புடைய கைத்தொழில்களில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு வாய்ப்புகள் அளித்தல்.


கப்றுக புறவர நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கத்திற்கான பிரதான செயற்பாடுகள்


(1) கப்றுக சங்கங்களை தாபித்தல்

கப்றுக சங்கங்கள் ஆரம்ப (கிராம சேவையாளர் பிரிவூ)இ பிரதேச (பிரதேச செயலாளர் பிரிவூ)இ மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் தாபிக்கப்படும். இதன் குறிக்கோள் தனிப்பட்ட அபிவிருத்திக்கும் தெங்கு கைத்தொழிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அனைவரும் உள்ளீடுகளை பயன்படுத்துவதற்கு ஏற்படுத்தி கைத்தொழிலினை விருத்தி செய்வதற்குமான பயன்மிக்க நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை அமுல்படுத்துவதாகும்.


(2) கப்றுக பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம்

இதன் குறிக்கோள் அடையாளப்படுத்தப்பட்ட கப்றுக புறவர இனுள் முன் மாதிரி பயிர் செய்கை நிகழ்ச்சிதிட்டங்களை அமுல்படுத்துவதாகும். புதிய நடுகைஇ கீழ் நடுகைஇ மீள் நடுகைஇ மற்றும் இடைவெளி நிரப்புதலஇ; தெங்கு பூங்காங்கள் நாற்று மேடைகள் போன்ற கருத்திட்டங்கள் அமுலாக்கத்திற்காக மிகவூம் அவசியமாக கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பிரதேசத்தின் தென்னங் கன்று தேவைகள் இந்நாற்று மேடைகளில் இருந்து நிறைவூ செய்யப்படும்.


(3) கப்றுக உற்பத்திகளை ஊக்குவித்தல்

இந் நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் பிரதேசத்தில் கிடைக்கத்தக்க அனைத்து தெங்கு அடிப்படையாகக் கொண்ட மூலப் பொருட்களை பயன்படுத்துவதற்கும் புதிய உற்பத்திகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்ப்ட்ட பொருட்களை அறிமுகப்படுத்துவதாகும்.


(4) கப்றுக தொழில் உருவாக்கல் செயற்பாடுகள்
தெங்குடன் தொடர்புடைய உப தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல் ஊடாக புதிய சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் தற்போதைய சுயதொழில் வழிகளில் அடையாளப்படுத்லை உறுதிப்படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரத்தினை உயர்த்துதல்.


(5) கப்றுக ஆராய்ச்சி மற்றும் தகவல் வலைப்பின்ணல்

தெங்குடன் தொடர்புடைய மனித வளங்கள் மற்றும் பௌதீக வளங்களுடன் தொடர்புபட்ட தகவல்களின் வலைப்பின்னல் அமைப்பின் ஊடாக கலத்திற்கான தெங்குடன் தொடர்புபட்ட ஆராய்ச்சிகளின் ஊடாக கிடைக்கப்பெற்ற சமகாலப்படுத்தப்பட்ட அறிவினை இடம்மாற்றுவதற்கும் பயிர் செய்கை மற்றும் கைத்தொழிலின் அபிவிருத்திக்கான புதிய தொழிநுட்பங்களை பணிக்கு அமர்த்துவதற்கும் ஆழமாக சிந்திக்கப்பட்டுள்ளது.


(6 )கப்றுக நிதியம்

கப்றுக நிதியமானது தெங்கு பயிர்செய்கை மற்றும் தெங்குடன் தொடர்புடைய கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதிசார் உதவிகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.


(7) கப்றுக காப்புறுதி

இதன் நோக்கம் தெங்குடன் தொடர்பட்ட வேறுபட்ட தொழில்கள்இ தொழில் முயற்சிகளில் மற்றும் உற்பத்தி கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக காப்புறுதி திட்டம் ஒன்றுக்கு பங்களிப்பு செய்வதற்கு ஈடுபடுத்துவதாகும்.


(8) கப்றுக கடன் நிகழ்ச்சித்திட்டம்

இதனுள் பல்வேறுபட்ட தெங்குடன் தொடர்புடைய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக நிதிசார் உதவிகளை வழங்குதல்இ வங்கி வலைப்பின்னல் ஊடான கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.


(9) கப்றுக சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்

தெங்குடன் தொடர்புடைய பெறுமதி சேர்க்கப்பட்ட பல்தரப்பட்ட உற்பத்திகளுக்காக உயர் சர்வதேச மற்றும் தேசிய சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தல்


(10) கப்றுக மானிய நிகழ்ச்சித்திட்டம்

பயிர்செய்கை காணி மற்றும் புனரமைப்பதற்கான தேவைப்பாடுகளை நிறைவூ செய்கின்றஇ தகுதியூடைவர்கள் மத்தியில் தெங்குடன் தொடர்புடைய கைத்தொழிலாளர்களுக்காக மானிய அடிப்படையில் முதலீட்டு உதவிகளை ஏற்படுத்தல்


(11)கப்றுக சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

மஹிந்த சிந்தனையில் முன் வைக்கப்பட்ட விவசாயச் சுற்றுலா நிகழ்ச்சித்திட்;ட ஊக்குவிப்பு கருப்பொருளின் கீழ் சுற்றுலாத்துறைக்காக தெங்குடன் தொடர்புபட்ட சாத்தியமான பிரதேசங்களை அடையாளப்படுத்தலை ஊக்குவித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல


 

 ஆனந்தர் ஞானம் பெற்றது

இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர்.

இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார்.

ஒரு நாள், "சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,'' என்றார்.

"அந்த மூன்று கட்டளைகள் என்ன?'' என்று கேட்டார் புத்தர்.

"நான் எப்பொழுதும் உம்முடனேயே இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் என்னை வேறு நாடுகளுக்கு அனுப்பக்கூடாது. நான் உம்மைச் சந்திக்க யாருக்கு அனுமதி தந்தாலும் நீர் சந்திக்க வேண்டும். நள்ளிரவாக இருந்தாலும் முடியாது என்று சொல்லக்கூடாது. மூன்றாவதாக நீர் உறங்கும் போது உமது அருகிலேயே நான் உறங்க வேண்டும். வேறு அறைக்குச் சென்று துõங்கு என்று என்னிடம் சொல்லக் கூடாது. சரியா,'' என்றார்.

"அப்படியே செய்கிறேன்!'' என்று வாக்குறுதி தந்தார் புத்தர். நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடனே தங்கியிருந்தும் ஆனந்தர் ஞானம் பெறவில்லை.

வெகு தொலைவிலிருந்து வந்து புத்தரின் சீடர்களான சிலர் சில நாட்களிலேயே ஞானம் பெற்றதை அறிந்த ஆனந்தர் தனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.

இறக்கும் நிலையில் இருந்தார் புத்தர். அவரிடம் ஆனந்தர், ""இரவும் பகலும் உம்மைப் பிரியாமல் நாற்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து

"வாழ்க்கையைப் பற்றி நீர் ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை. நீர் ஞானம் பெறுவதற்கு நானே தடையாக இருந்திருக்கிறேன். நான் இறந்தபிறகு நீர் ஞானம் பெற்றாலும் பெறலாம்.

"நீர் என்னிடம் மூன்று வேண்டுகோளை வைத்தீர். நான் அவற்றை ஏற்றுக் கொண்டது உம் வாழ்க்கைக்குத் தடையாயிற்று. நீர் எப்பொழுதும் என் அண்ணன் என்றே நினைத்துக் கொண்டு மற்றவர்களை விட என்னிடம் உமக்கு அதிக உரிமை உள்ளது என்று கருதினீர். உமக்காகத் தான் அந்த மூன்று வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். என் இறப்பு ஒன்று தான் நீர் ஞானம் பெற உமக்கு உதவி செய்யும்,'' என்றார்.
அதன்பிறகு இறந்தும் போனார் புத்தர்.

ஞானம் பெற்ற சீடர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடினர். கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளில் புத்தர் என்னென்ன அறிவுரைகள் சொன்னாரோ அவற்றை எழுதி வைக்க வேண்டுமென்று நினைத்தனர்.

அங்கிருந்த யாருமே புத்தருடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது இல்லை. அத்தனை ஆண்டுகளும் புத்தருடன் இருந்த ஆனந்தரோ இன்னும் ஞானம் பெறவில்லை

விட்டேன். இன்னும் நான் ஞானம் பெறவில்லை. நீர் இறந்தபின் என் நிலை என்ன ஆகும்?'' என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்டார்

அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே அமர்ந்து புலம்பியபடி இருந்தார் ஆனந்தர்.

"புத்தரே! உங்களுடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் என் உள்ளத்தில் பதிந்து உள்ளது. ஞானம் பெறாதவர் என்பதனால் எனக்கு அனுமதி இல்லையே. நான் என்ன செய்வேன்,'' என்று அழுது புலம்பினார். வாழ்க்கையே அழிந்து விட்டது போல அழுதார்.
கண்ணீர் வெள்ளத்தில் நனைந்தார். அப்போது தன் தம்பி தான் புத்தர் என்ற அவருடைய ஆணவம் நீங்கியது. குழந்தையைப் போல ஆன அவர் அப்பொழுதே ஞானம் பெற்றார்.


வெளியே வந்த சீடர்கள் சில விளக்கங்கள் கேட்பதற்காக ஆனந்தரை தேடினர். அவர் கூறிய விளக்கங்களை கேட்டு ஆச்சரியமடைந்த சீடர்கள் அவர் ஞானம் பெற்றதை அறிந்து மகிழ்ந்தனர்.

புத்தரின் போதனைகளை எல்லாம் அதன்பிறகு ஆனந்தரே தொகுத்தார்.

.

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola